Published : 05 Feb 2025 02:47 AM
Last Updated : 05 Feb 2025 02:47 AM

1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: தெலங்கானா பேரவையில் முதல்வர் தகவல்

தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார்.

இதுகுறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது:

தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என கடந்த 2024 பிப்ரவரியில் தீர்மானிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய கர்நாடகா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலங்கானாவில் தொடர்ந்து 50 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் 66.39 லட்சம் குடும்பங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 45.15 லட்சம் குடும்பங்கள் இடையே சமூக, வருவாய், அரசியல், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் ஜாதிவாரியான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. மாநிலத்தில் மொத்தம் 1.12 கோடி குடும்பத்தாரிடம் சர்வே எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எஸ்சி சமூகத்தினர் 61,84,319 (17.43%), முஸ்லிம்களை தவிர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 1,64,09,179 (46.25%), பழங்குடியினர் 37,05,929 (10.45%), முஸ்லிம்கள் 44,57,012 (12.56%) என்ற எண்ணிக்கையில் உள்ளனர். இதனை அரசு நலத் திட்டங்களுக்கு பயன்படுத்துவோம். மக்கள் கணக்கெடுப்பை விட ஜாதிவாரி கணக்கெடுப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இதில் 76 ஆயிரம் டேட்டா என்ட்ரி ஆபரேடர்கள், 36 நாட்கள் வரை பணியாற்றி அனைவரின் விவரங்களை பதிவு செய்தனர். இவ்வாறு ரேவந்த் ரெட்டி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x