Published : 05 Feb 2025 02:29 AM
Last Updated : 05 Feb 2025 02:29 AM
அங்கன்வாடி சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என சிறுவன் விடுத்த வேண்டுகோளை கேரள அமைச்சர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சிறுவன் சாங்கு. இவனுக்கு பிரியாணி மிகவும் பிடித்த உணவு. ஆனால் இவன் செல்லும் அங்கன்வாடியில் அடிக்கடி உப்புமா வழங்குகின்றனர். இது சிறுவனுக்கு பிடிக்கவில்லை. ‘‘அங்கன்வாடியில் உப்மாவுக்கு பதில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேண்டும்’’ என சிறுவன் சாங்கு கூறியதை அவனது தாய் செல்போனில் வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பார்த்த கேரளாவின் சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அங்கன்வாடி உணவு பட்டியல் மறுபரிசீலனை செய்யப்பட்டு பிரியாணி சேர்க்கப்படும் என கூறியுள்ளார். சிறுவனுக்கும், அவனது தாய்க்கும் அமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிறுவன் சாங்குவின் தாய் கூறுகையில், ‘‘ இந்த வீடியே சமூக ஊடகத்தில் வெளியானதில் இருந்து பலர் எனக்கு போன் செய்து சாங்குவுக்கு பிரியாணி மற்றும் பொரித்த கோழி வழங்க முன்வந்துள்ளனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT