மகா கும்பமேளாவில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: உ.பி. அரசு அறிவிப்பு

மகா கும்பமேளாவில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: உ.பி. அரசு அறிவிப்பு
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளாவில் மூத்த குடிமக்கள் பங்கேற்பதற்காக அம்மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தேசிய மெடிகோஸ் கூட்டமைப்பு மற்றும் அலிம்கோ ஆகியற்றுடன் உத்தர பிரதேச அரசின் சமூக நலத்துறை இணைந்து மூத்த குடிமக்களுக்காக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பல்வேறு முதியோர் இல்லங்களில் இருந்து வருபவர்களுக்காக 100 படுக்கைகள் கொண்ட ஆசிரமம் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பக்தி வழிபாடு நடத்துவது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு உதவி செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், செவித்திறன் குறைபாடு உடைய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், இலவசமாக பரிசோதனை செய்யப்படுவதுடன், தேவையானவர்களுக்கு கருவிகள் வாங்கவும் உதவியும் செய்யப்படும்.

இதுவரை, லக்னோ, சீதாபூர், ஹர்டோய், கவுசாம்பி, படோனி, சித்தார்த்நகர், கொண்டா, மிர்சாபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மகா கும்பமோவில் பங்கேற்றுள்ளனர். பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறும் அம்ரித் புனித நீராடல் நிகழ்வில் 2,000 மூத்த குடிமக்களை பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in