கர்நாடகாவில் கருணை கொலைக்கு அனுமதி: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்

கர்நாடகாவில் கருணை கொலைக்கு அனுமதி: அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
Updated on
1 min read

பெங்களூரு: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளை கருணை கொலை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு கண்ணியமாக இறப்பதற்கான உரிமை உள்ளது என 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. 2023-ல் இதற்கான விதிமுறைகளை யும் உச்ச நீதிமன்றம் வகுத்து அளித்துள்ளது.

அதன்படி, தீராத நோயால் பாதிக்கப்பட்டு குணமடைய முடியாமல் தவிக்கும் நோயாளிகள் கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

மருத்துவ நிபுணர் குழு: இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, கருணைக் கொலையை அனுமதிப்பது குறித்து 3 மருத்துவர்களை கொண்ட 2 குழுக்கள் பரிசோதனை மேற்கொண்டு முடிவெடுக்கும். இந்த முதன்மை, இரண்டாம் நிலை குழுவில் ஒரு அரசு மருத்துவர் இருப்பார். மாவட்டம் தோறும் இந்த மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்படும். அந்த குழுவை சேர்ந்த மருத்துவர் கள், உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை என உறுதி செய்த பிறகு. நோயாளி கண்ணியமாக கருணை கொலை செய்யப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in