‘பெரிய நிகழ்வில் சிறிய சம்பவம்!’ - மகா கும்பமேளா நெரிசல் குறித்து உ.பி. அமைச்சர் கருத்து

அமைச்சர் சஞ்சய் நிஷாத்
அமைச்சர் சஞ்சய் நிஷாத்
Updated on
1 min read

லக்னோ: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலை ‘பெரிய நிகழ்வில் அரங்கேறிய சிறிய சம்பவம்’ என உத்தர பிரதேச மாநில அமைச்சர் சஞ்சய் நிஷாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேற்று மவுனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணிகள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து உ.பி மாநில மீன்வளத்துறை அமைச்சரும் நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத் கருத்து தெரிவித்துள்ளார். இவரது கட்சி பாஜவுடன் கூட்டணி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது வருத்தம் தருகிறது. இவ்வளவு பெரிய நிகழ்வில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டிருக்கும் இடத்தில் இது மாதிரியான சிறிய சம்பவம் நடக்கும். இது மாதிரியான சம்பவம் இனி நடக்கக்கூடாது. மக்கள் மற்றும் அரசு என அனைவரும் விழிப்புடன் இருக்கிறோம். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். முதல்வர் யோகி ஆதித்யநாத் சொல்லி உள்ளது போல பக்தர்கள், புனித நீராட கிடைக்கும் இடத்தில் நீராடலாம்.” என அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in