

டெல்லியில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் குமாரி செல்ஜா வீட்டு பணிபெண்ணின் கணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான குமாரி செல்ஜாவின் வீட்டில் இறந்த நிலையில் ஆண் உடல் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவர், செல்ஜா வீட்டில் பணிபுரியும் பெண்ணின் கணவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து செல்ஜா வீட்டில் இன்று காலை 8 மணி முதல் தடயவியல் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது இயற்கைக்கு மாறான மரணமா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாக டெல்லி போலீஸ் கூடுதல் கமிஷனர் எஸ்.பி.எஸ். தியாகி கூறினார்.