செயலிகள் மூலம் 34 சதவீதம் பேர் மோசடி நபர்களிடம் பணத்தை இழக்கின்றனர்

செயலிகள் மூலம் 34 சதவீதம் பேர் மோசடி நபர்களிடம் பணத்தை இழக்கின்றனர்
Updated on
1 min read

பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக, நாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர் மோசடி நபர்களிடம் பணத்தை இழப்பதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்ஐசிஓ என்ற தனியார் ஆய்வு நிறுவனம் ஆன்லைன் மோசடிகள் குறித்து கடந்தாண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்தியாவில் சுமார் ஆயிரம் இளைஞர்களிடமும், 14 நாடுகளைச் சேர்ந்த 11,000 பேரிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்து எஐசிஓ இ நிர்வாக இயக்குனர் தத்து கோம்பல்லா கூறியதாவது:

பணம் செலுத்தும் செயலிகள் மூலமாக நடைபெறும் மோசடிகள் இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. பொருட்கள் மற்றும் சேவைகள் அல்லது முதலீடுகளுக்கு பணம் செலுத்தி 34 சதவீதம் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மோசடி நபர்கள் அனுப்பும் தகவல்கள் மூலம் 60 சதவீதம் பேர் மோசடியில் சிக்கியுள்ளனர். ரூ.8 லட்சத்துக்கு மேல் அதிகமான மோசடிகளின் சதவீதம் கடந்த 2023-ம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 4 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ரூ.50,000-க்கும் கீழ் உள்ள மோசடியில் சிக்கியதாக 56 சதவீதம் இந்திய நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர். மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்ட மோசடி தடுப்பு நடவடிக்கைகளை 45 சதவீத வாடிக்கையாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

மோசடிகளுக்கும் மத்தியிலும் டஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் இந்திய வர்த்தகத்தில் தொடர்ந்து அதிகரிக்கிறது. இவ்வாறு தத்து கோம்பல்லா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in