கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு கிடைத்த நன்கொடை ரூ.4,340 கோடியாக அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் பாஜகவுக்கு கிடைத்த நன்கொடை ரூ.4,340 கோடியாக அதிகரிப்பு
Updated on
1 min read

பாஜக.,வின் ஆண்டு வருமானம் கடந்த நிதியாண்டில் 4,340.5 கோடியாக அதிகரித்துள்ளது. இது 83 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்திடம் முக்கிய அரசியல் கட்சிகள் தங்களின் ஆண்டு வருமானத்தை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளன. அதன் விவரம்: பாஜக கட்சிக்கு கடந்த 2022-23-ம் நிதியாண்டில் நன்கொடையாக 2,360.8 கோடி கிடைத்தது. இது 2033-24-ம் நிதியாண்டில் ரூ.4340.5 கோடியாக அதிகரித்தது. இதில் ரூ.1,685.6 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் வந்துள்ளது. தானாக முன்வந்து அளித்த நன்கொடை மூலம் ரூ.3,967 கோடி கிடைத்தது. ஆஜிவான் சகாயக் நிதி ரூலம் ரூ.236.3 கோடி கிடைத்தது. இதுர வழிகளில் ரூ.2,042.7 கோடைி கிடைத்தது.

பாஜக.,வின் வருவாய் கடந்த நிதியாண்டில் 83 சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜக ரூ.2,211.7 கோடி செலவு செய்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டின் செலவை விட 62 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் பிரச்சார செலவுக்கு ரூ.1,754 கோடி செலவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் 2022-23-ம் நிதியாண்டு வருமானம் ரூ.452.4 கோடியாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில் 170 சதவீதம் அதிகரித்து ரூ.1,225 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.828.4 கோடி கிடைத்தது. இதன் செலவு 1,025.2 கோடி. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 120 சதவீதம் அதிகம். ராகுல் காந்தியில் தேசிய நடைபணயத்துக்கு ரூ.49.6 கோடி செலவிடப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டில் சந்திர சேகர ராவின் பிஆர்எஸ் கட்சிக்கு ரூ.685.5 கோடியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.612.4 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in