இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் | கோப்புப் படம்
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன் | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இந்திய அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் பலராம், உள்ளிட்ட 18 பேர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் சதாசிவா நகர் காவல் நிலையத்தில் இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார் கொடுத்தவர் போவி பழங்குடியினத்தைச் சேர்ந்த துர்க்ப்பா ஆவார். அவர் அந்தப் புகாரில், “நான் இந்திய அறிவியல் மையத்தின் நீடித்த தொழில்நுட்பப் பிரிவில் பணி புரிந்தேன் கடந்த 2014-ம் ஆண்டு தான் பணியில் இருந்தபோது போலியான பாலியல் வழக்கில் சிக்கவைக்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டேன். அப்போது சாதிய ரீதியிலான அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டை கோவிந்தன் ரங்கராஜன், ஸ்ரீதர் வாரியார், சந்தியா விஸ்வரய்யா, ஹரி கேவிஎஸ் தாசப்பா, பலராம் பி, ஹேமலதா மிஸ்ஸி, சத்தோபத்யாய, பிரதீப் சாவ்கர், மனோகரன் ஆகியோர் மீதும் துர்கப்பா முன்வைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய அறிவியல் மையம் தரப்பிலோ அல்லது அதன் முன்னாள் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றிருந்த கிரிஷ் கோபாலகிருஷ்ணன் தரப்பில் இருந்தோ எந்த எதிர்வினையும் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in