மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் மாஹேஜி மற்றும் பர்த்ஹடே ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் மாலை லக்னோ- மும்பை எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் தீப்பற்றியதாக யாரோ ஒருவர் புரளி கிளப்பியதால், ரயிலில் இருந்த சில பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். சிலர் அருகில் உள்ள தண்டவாளத்தில் குதித்து வெளியேறினர். அப்போது அந்த வழியாக சென்ற பெங்களூர் - டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் அவர்வகள் மீது மோதியது.

இதில் 13 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் மும்பையில் வசிக்கும் நோபாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களின் 10 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுக்கு ரயில்வே சார்பில் 2.70 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.15 லட்சமும், மகாராஷ்டிர அரசு சார்பில் தலா ரூ.5 லட்சமும் கருணைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5,000 ரயில்வே சார்பில் அளிக்கப்படவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in