அர்விந்த் கேஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

அர்விந்த் கேஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Updated on
1 min read

புதுடெல்லி: அர்விந்த் கேஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

டெல்லியில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரச்சாரம் சுடுபிடித்துள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அர்விந்த் கேஜ்ரிவால் கார் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி தனது எக்ஸ் தளத்தில், “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். தோல்வி பயம் காரணமாக கேஜ்ரிவால் கார் மீது பர்வேஷ் வர்மா ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் மூலம் கேஜ்ரிவால் பிரச்சாரத்தை முடக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்தகைய கோழைத்தனமான தாக்குதலைக் கண்டு கேஜ்ரிவால் பின்வாங்க மாட்டார். இதற்கு டெல்லி மக்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்” என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in