Published : 18 Jan 2025 05:28 AM
Last Updated : 18 Jan 2025 05:28 AM

நீதிமன்றங்களில் திருநங்கைகளுக்கு தனியாக கழிவறை கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அசாம் பார் கவுன்​சிலைச் சேர்ந்த வழக்​கறிஞர் ராஜீப் கலிதா என்பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்​தார். அதில் நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்ற வளாகங்​களில் வழக்​கறிஞர்​கள், ஊழியர்​கள், பொது​மக்​களில் ஆண்கள், பெண்​கள், மாற்றுத் திறனாளி​கள், திருநங்​கைகள் ஆகியோ​ருக்கு தனித்தனி கழிப்​பறைகள் கட்ட உத்தரவிட வேண்​டும் என கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிப​திகள் ஜே.பி.பர்​திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்​வின் முன்பு நேற்று முன்​தினம் விசா​ரணைக்கு வந்தது. அப்போது நீதிப​திகள் பிறப்​பித்த உத்தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் உள்ள நீதி​மன்​றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்​களில் ஆண்கள், பெண்​கள், மாற்றுத்​திறனாளி​கள், திருநங்​கைகள் ஆகியோ​ருக்கு தனித்தனி கழிவறைகள் கட்ட வேண்​டும். கழி​வறை​கள் கட்டு​வதற்கான நி​தியை அனைத்து ​மாநில அரசுகளும் ஒதுக்க வேண்​டும். இவ்​வாறு நீ​திப​தி​கள் உத்​தர​விட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x