

அகமதாபாத்: சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் விரைவான குடியேற்ற சேவை திட்டத்தை (பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்)மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் 21 முக்கிய விமான நிலையங்களில் நம்பகமான பயணியருக்கான விரைவான குடியேற்ற சேவை திட்டம் (எப்டிஐ-டிடிபி) செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் 3 முனையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதையடுத்து மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் இத்திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அகமதாபாத்தில் இருந்து மத்திய அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.