சத்தீஸ்கர் | பீஜப்பூரில் நிகழ்ந்த என்கவுன்டரில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 நக்சலைட்டுக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து பஸ்தர் ரேஞ்ச் காவல்துறை ஐஜி சுந்ததரராஜ் கூறுகையில், "இந்திராவதி தேசிய பூங்காவுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய நக்சல் எதிர்ப்பு கூட்டு தேடுதல் வேட்டையின் போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. நக்சல் எதிர்ப்பு தேடுதல் வேட்டையில் மாவட்ட பாதுகாப்புப் படை (டிஆர்ஜி), சிறப்பு புலனாய்வு படை (எஸ்டிஎஃப்) மற்றும் மாவட்ட படை ஆகியோர் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

நீண்டநேர துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அந்த இடத்தில் சீருடை அணிந்த மூன்று நக்சலைட்டுகளின் உடல்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கி மற்றும் வெடிபொருகள் மீட்கப்பட்டன. தேடுதல் வேட்டை இன்னும் தொடர்கிறது" என்று தெரிவித்தார்.

இந்தத் துப்பாக்கிச் சண்டையுடன் சேர்த்து இந்தாண்டில் தனித்தனியாக நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாரயண்பூர் - தன்டேவாடா எல்லைப் பகுதியில் உள்ள அபுஜ்மத்தில் ஜனவரி 6ம் தேதியுடன் நிறைவடைந்த மூன்று நாட்கள் நக்சல் எதிர்ப்பு தேடுதல் வேட்டையில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 9ம் தேதி சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக, ஜனவரி 3ம் தேதி ராய்பூர் பகுதியில் உள்ள கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு நச்சலைட் கொல்லப்பட்டார்.

அதேபோல், கடந்த ஆண்டு மாநிலத்தில் நடந்த தனித்தனியாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 219 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி பீஜபூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸாரும் ஒரு வாகன ஓட்டியும் கொல்லப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in