கர்நாடகாவில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்

கர்நாடகாவில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்
Updated on
1 min read

கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ (36). இவரது மகள் தேஜஸ்வினி (8). அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று முன் தினம் காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

8 வயதே ஆன‌ மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பதனகுப்பேவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மகளை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது. உயிரிழந்த மாணவியின் வீட்டுக்கு சென்ற சாம்ராஜ்நகர் கல்வி அலுவலர் ஹனுமந்த ஷெட்டி, பள்ளி ஊழியர்கள், பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in