பெங்களூருவில் பிப்.10 முதல் 14 வரை ‘ஏரோ இந்தியா 2025’ கண்காட்சி!

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆசியாவின் மிகப்பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும். 'ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை' என்ற கருப்பொருளுடன், இந்த நிகழ்வு வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு இடையே கூட்டாண்மையை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்குவதுடன், உள்நாட்டுமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்தவும் உலகளாவிய மதிப்பு சங்கிலியில் புதிய வழிகளைக் கண்டறிவதற்கும் உதவும்.

முதல் மூன்று நாட்கள் (பிப்ரவரி 10,11,12) வணிகத்துக்காகவும் 13, 14 ஆகிய தேதிகளில் பொது மக்கள் காண்பதற்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் விமான சாகச காட்சிகள், விண்வெளித் துறையைச் சேர்ந்த ஏராளமான ராணுவ தளங்களின் நிலையான கண்காட்சிகள் இடம்பெறும். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணையமைச்சர், முப்படை தளபதி, பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட பல நிலைகளில் பல்வேறு இருதரப்பு சந்திப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in