குஜராத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தில் உள்ள போர்பந்தர் விமான நிலையத்தில் இன்று (ஜன. 5) பிற்பகல் தரையிறங்கும் போது இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மூன்று பணியாளர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் மதியம் 12.10 மணியளவில் நடந்ததாக போர்பந்தர் காவல் கண்காணிப்பாளர் பகீரத்சிங் ஜடேஜா தெரிவித்தார்.

போர்பந்தர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மூன்று பணியாளர்களுடன் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) விபத்துக்குள்ளானது என அவர் கூறினார்.

மூன்று பணியாளர்களும் ஹெலிகாப்டரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு பலத்த தீக்காயங்களுடன் போர்பந்தரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்த கமலா பாக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கன்மியா, மூவரும் மருத்துவமனையில் இறந்ததாகக் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in