சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

குறியீட்டுப் படம்
குறியீட்டுப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஒரு காவலர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கரின் நாராயண்பூர் - தண்டேவாடா மாவட்டங்களின் வனப்பகுதியான அபுஜ்மார் வனப்பகுதியில் உலவும் நக்சலைட்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் நேற்று மாலை (ஜன. 4) ஈடுபட்டனர். சிறப்பு பாதுகாப்புப் படை மற்றும் வன பாதுகாப்புப் படை வீரர்கள் இணைந்து இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள பஸ்தர் பகுதியின் ஐஜி சுந்தர்ராஜ், "நேற்று இரவு நிகழ்ந்த மோதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், வன பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தலைமை காவலர் சன்னு கரம் என்பவர் உயிரிழந்தார்.

நக்ஸல் சீருடையில் இருந்த நான்கு நக்சலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், AK-47 துப்பாக்கி மற்றும் SLR துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. அப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in