Last Updated : 26 Jul, 2018 06:17 PM

 

Published : 26 Jul 2018 06:17 PM
Last Updated : 26 Jul 2018 06:17 PM

“லாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”: மக்களவையில் அதிமுக, மார்க்சிஸ்ட் எம்பிக்கள் வலியுறுத்தல்

டீசல் விலை உயர்வு, டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று மக்களவையில் இன்று அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தின.

டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் கடந்த 20-ந்தேதி முதல் நாடு தழுவிய லாரி ‘ஸ்டிரைக்’ நடைபெற்று வருகிறது. இதனால் லாரிகள் நிறுத்தப்பட்டு சேவை முடக்கப்பட்டுள்ளது. இன்று 6-து நாளாக லாரி ஸ்டிரைக் நீடித்து வருகிறது.

நாடு  முழுவதும் சரக்குகள் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல லட்சம் கோடி பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. காய்கறி, பழங்கள், உணவுப் பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் பாதிப்பு அடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. சென்னையில் 4,500 லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று உள்ளன.

இந்நிலையில் மக்களவையில் கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் அதிமுக எம்.பி. பி.ஆர்.சுந்தரம் லாரி ஸ்டிரைக் தொடர்பான விஷயத்தை எழுப்பினார். அவர் பேசுகையில், தமிழகம் மட்டுமல்ல நாடுமுழுவதும் 6-வது நாளாகத் தொடரும் லாரி ஸ்டிரைக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.300 கோடி மதிப்புள்ள சரக்குகள் இந்த வேலைநிறுத்தம் காரணமாக தேங்கிக்கிடக்கின்றன. மத்தியஅரசு இதில் தலையிட்டு லாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேம்டும் என்று வலியறுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. முகமது சலிம் பேசுகையில், லாரி உரிமையாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அவர்களைப் பேச்சுக்கு அழைத்து இதற்குத் தீர்வு காண வேண்டும். இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x