Published : 09 Jul 2018 08:31 AM
Last Updated : 09 Jul 2018 08:31 AM

அமர்நாத் யாத்திரையில் 2 பக்தர்கள் மரணம்: நிலச்சரிவு, உடல்நலக் குறைவால் இதுவரை 14 பேர் பலி

காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. இதுவரை 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பல்டால் அடிவார முகாமில் தங்கியிருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த லஷ்மி பாய் (54) என்ற பெண் மாரடைப்பால் இறந்தார். மேலும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த ரவீந்தர் நாத் (72) என்பவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார். நிலச்சரிவு, உடல்நலக்குறைவு ஆகியவற்றால் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி பர்ஹான் வானியின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரிவினைவாதிகள் நேற்று ‘பந்த்’துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதை முன்னிட்டு பயணிகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு- ஸ்ரீநகர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அமர்நாத் யாத்திரீகர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டனர். பாதுகாப்பு கருதி பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து பக்தர்கள் யாரும் நேற்று அமர்நாத் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x