மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்ப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தார்.

மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு அருகே, சுமீத் மீனா என்ற 10 வயது சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் நிலைதடுமாறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு, விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் பல மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை 9.30 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டான்.

சுமார் 140 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிறுவன் 39 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டதாக குணா ஆட்சியர் சதேந்திர சிங் தெரிவித்தார். சிறுவனை மீட்க 22 அடி ஆழ குழி தோண்டப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆழ்துளை கிணறு மூடாமல், திறந்து இருந்ததுதான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மருத்துவர்கள் சிறுவன் உயிரை காப்பாற்ற முயன்றும், சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in