Last Updated : 19 Jul, 2018 11:59 AM

 

Published : 19 Jul 2018 11:59 AM
Last Updated : 19 Jul 2018 11:59 AM

அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்ட மாணவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: ஜேஎன்யூ நிர்வாகம் உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு விழாவில் குறுக்கிட்டு அம்பேத்கரை புகழ்ந்து கோஷமிட்டதாக மாணவர் சங்கத் தலைவருக்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மாணவர் அமைப்பான என்எஸ்யூஐ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவராக சென்ற ஆண்டு பதவி வகித்த மாணவர் சன்னி திமான் கூட்டத்தில் கலாட்டா செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சன்னி திமான் கூறுகையில் ‘‘கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் ''ஜெய் பீம், பாபா சாஹெப் அமர் ராஹே'' என்று கோஷமிட்டது உண்மைதான். நான் காரணமில்லாமல் அப்படி கோஷமிடவில்லை. அது அம்பேத்கர் ஜெயந்திவிழா.

பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகதீஷ் குமாரிடம், மத்திய நூலகத்தின் பெயரை பாபா சாஹேப் பி.ஆர்.அம்பேத்கர் மத்திய நூலகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அப்போதுதான் அந்த கோஷத்தை நான் எழுப்பினேன்’’ எனக் கூறினார்.

பல்கலைக்கழக உயரதிகாரிகள் விசாரணைக்குப் பிறகு ரூ.10,000க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தொகை 10 நாட்களுக்குள் செலுத்தப்படவேண்டும் எனவும் திமானுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x