புஷ்பா-2 திரைப்பட நெரிசலில் சிக்கி பெண் இறந்த விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்

புஷ்பா-2 திரைப்பட நெரிசலில் சிக்கி பெண் இறந்த விவகாரம்: மனித உரிமை ஆணையத்தில் புகார்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா-2 திரைப்பட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தது தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகெங்கிலும் வெளியானது. முன்னதாக புதன்கிழமை இரவு இப்படத்தின் பிரிமியர் ஷோக்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பல திரையரங்களில் நடந்தன. இதில் ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடந்த பிரிமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். இதனால் இத்திரையங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண்ணும் ஸ்ரீதேஜ் என்ற அவரது மகனும் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மகன் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில், அல்லு அர்ஜுன், இயக்குநர் சுகுமார், படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது நேற்று சிக்கிடபல்லி போலீஸ் நிலையத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் விஜயகுமார் எனும் வழக்கறிஞர் புகார் அளித்தார். இந்தப் புகாரை தேசிய உரிமை ஆணையமும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in