குஜராத்தின் சூரத் பகுதியில் குப்பையை எரித்து குளிர்காய்ந்த சிறுமிகள் 3 பேர் உயிரிழப்பு

படம்: மெட்டா ஏஐ
படம்: மெட்டா ஏஐ
Updated on
1 min read

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் குப்பைகளை எரித்து குளிர் காய்ந்த 3 சிறுமிகள் விஷ வாயு காரணமாக உயிரிழந்தனர்.

குஜராத்தின் சூரத் நகரில் உள்ளது சச்சின் பகுதி. இங்குள்ள பாலி கிராமத்தில் 5 சிறுமிகள், வயல் பகுதியில் குப்பையை குவித்து தீ வைத்து, அதன் முன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குப்பையில் இருந்து நச்சு புகை வெளியேறியது. அதை சுவாசித்தும் அவர்கள் வாந்தி எடுத்தனர். பின்னர் மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு துர்கா மகந்தோ(12), அமிதா மகந்தோ (14) மற்றும் அனிதா மகந்தோ(8) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழப்புக்கான சரியான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் பரிசோனைக்குப் பின்பே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் நச்சு புகை காரணமாக இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in