கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மோதி மீன்பிடி படகில் சென்ற 2 மீனவர்கள் மாயம்

கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் மோதி மீன்பிடி படகில் சென்ற 2 மீனவர்கள் மாயம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்திய கடற்படையின் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் ஒன்று, மீன்பிடி படகு ஒன்றின் மீது மோதியதில் 2 மீனவர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படை கப்பல்கள் மற்றும் விமானம் ஈடுபட்டுள்ளது.

இந்திய கடற்படையில் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் பல நவீன அம்சங்கள் உள்ளன. கடலின் மேற்பரப்பில் இருந்தும், கடலுக்கும் அடியில் இருந்தும் இந்த கப்பல் மூலம் டார்பிடோ உட்பட பல ரக ஏவுகணைகளை வீசி எதிரி நாட்டு போர்க்கப்பல்களை தகர்க்க முடியும். உளவுப் பணி, கண்காணிப்பு பணி கடலில் கண்ணி வெடிகளை அமைத்தல் போன்றவற்றிலும் ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் ஈடுபடுகின்றன.

இதில் ஒரு நீர்மூழ்கி கப்பல் கோவா கடற்கரை பகுதியில் இருந்து 70 நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தது. அப்போது இந்த கப்பல் எதிர்பாரதவிதமாக மீன்பிடி படகு ஒன்றில் மோதியது. ‘மர்தோமா’ என்ற பெயர் உடைய அந்த மீன்பிடி படகில் பயணம் செய்த 13 பேர் கடலில் விழுந்தனர். இவர்களில் 11 பேரை கடற்படையினர் இதுவரை மீட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை.

அவர்களை தேடும் பணியில் கடற்படையின் 6 கப்பல்கள், ஒரு விமானம், கடலோர காவல் படையின் கப்பல்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in