

ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகளின் உளவாளி இருந்தார் என்று முன்னாள் உள்துறைச் செயலாளர் ஆர்.டி. பிரதான் தனது புத்தகத்தில் திடுக்கிடும் தகவலை வெளியிட் டுள்ளார்.
இந்திய ஆட்சிப் பணியில் 36 ஆண்டுகள் பணியாற்றிய ஆர்.டி.பிரதான், 1998 முதல் 2003 வரை சோனியா காந்தியின் அலுவலகப் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய ‘மை இயர்ஸ் வித் ராஜீவ் அண்ட் சோனியா’ என்ற புத்தகம் அண்மையில் வெளியானது. அந்தப் புத்தகத்தில் ஆர்.டி. பிரதான் கூறியிருப்பதாவது:
1991 மே 21-ம் தேதி பெரும் புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தியின் வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவர் ஊடுருவி யுள்ளார். சோனியா காந்தியும் அதே கருத்தைக் கொண்டிருந்தார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
ராஜீவுக்கு நெருக்கமானவர்கள் அந்த உளவாளியிடம் முக்கிய மான தகவலை பரிமாறியி ருக்கக்கூடும் என்று கருதுகிறேன். எனினும் என்னால் அந்த உளவாளியை அடையாளம் காண முடியவில்லை.
இவ்வாறு பிரதான் தெரிவித்துள்ளார்.