Published : 23 Jun 2018 09:43 PM
Last Updated : 23 Jun 2018 09:43 PM

வங்கியில் லோன் கேட்ட விவசாயி மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்த வங்கி மேலாளர்; தூது சென்ற பியூனும் தலைமறைவு

தலித் விவசாயிக்கு கடன் சலுகை அளிக்க அவரது மனைவியை பாலியல் உறவுக்கு அழைத்ததான புகாரின் பேரில் செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரி, மற்றும் பியூன் மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

புல்தானா மாவட்ட செண்ட்ரல் வங்கி மீது இந்தப் புகார் எழுந்துள்ளதால் பரபரப்பாகியுள்ளது. ததாலா கிளையின் அதிகாரி ராஜேஷ் ஹிவாசே மற்றும் பியூன் ஆகியோர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் கீழும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பியூன் மீது எஃப்.ஐ.ஆர்:

எங்களுக்கு வியாழனன்று புகார் வந்தது, நாங்கள் வெள்ளியன்று முதல் தகவலறிக்கை பதிவு செய்தோம். விவசாயியும் அவரது மனைவியும் ஒரு மாதத்திற்கு முன்பாக கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பம் செய்தனர். ஹிவாஸே விவசாயியின் மனைவியைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார். அதாவது கடன் அளிப்பதற்கான நடைமுறையைக் கடைபிடிப்பதற்கு முன்பாக விவசாயி மனைவியை தொடர்பு கொண்டுள்ளார்.

தன் ஆசையைத் தெரிவிக்க பியூனைப் பயன்படுத்தினார். இதனையடுத்து அந்தப் பெண்ணுக்கும் ஹிவாசேவுக்கும் சிலபல தொலைபேசி உரையாடல்கள் நடந்துள்ளன. அதில் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார், அதாவது கடன் சலுகை வேண்டுமென்றால் அந்தப் பெண் இதற்கு சம்மதிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளார்” என்று புல்தானா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீப் தொய்ஃபோதே தெரிவித்தார்..

இதனையடுத்து ஸ்வாபிமானி ஷேட்காரி சங்கட்னா அமைப்பு வங்கியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அதிகாரி ஹிவாசேயை நீக்கம் செய்யவும் கைது செய்யவும் கோரிக்கை எழுப்பப்பட்டது. கடன் வேண்டுமென்றால் என்னுடைய ஆசையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஹிவாஸே வற்புறுத்தியுள்ளார். இது மிகவும் இழிவானது, கடுமையான நடவடிக்கையைக் கோருவது என்று அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவு

வங்கி அதிகாரி ஹிவாஸே தலைமறைவாகியுள்ளார், பியூனையும் காணவில்லை, இவர்கள் இருவரையும் பிடிக்க ஹிவாஸேயின் வார்தா மாவட்டத்துக்கு சிறப்புப் படை அனுப்பப்பட்டுள்ளது.

அசோக் சவான் என்ற காங்கிரஸ் தலைவர் கூறும்போது, “மகாராஷிடிரா போன்ற முற்போக்கு மாநிலத்துக்கு இந்தச் சம்பவம் ஒரு தீராப்பழி, வெட்கக்கேடு, சம்பந்தப்பட்டவர்களை விரைவில் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வாங்கித் தரவேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x