தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்- லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4). இந்நிலையில் லாவண்யா நேற்று முன்தினம் க்ரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதச் சென்றார். அப்போது, சிறுமி பிரஹர்ஷிகா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். லாவண்யா தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பிரஹர்ஷிகா தாயை பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் ‘அம்மா’ என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடினார். அப்போது, வழியிலேயே வீட்டின் வாசற்படியில் பிரஹர்ஷிகா திடீரென சரிந்து விழுந்தார். இதைப்பார்த்த லாவண்யா ஓடிச் சென்று மகளை தூக்கினார். அவரிடம் நெஞ்சு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து சிறுமியை உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in