Published : 10 Jun 2018 09:04 AM
Last Updated : 10 Jun 2018 09:04 AM

தேசிய சுகாதார திட்டத்தை அமல்படுத்த 8 மாநில, 4 யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசு ஒப்பந்தம்

தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இதுவரை 8 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேச அரசுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்ய ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் 10 கோடி ஏழை குடும்பத்தினருக்கு, ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் அரசு மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளிலும் சேர்த்து கட்டணமின்றி சிகிச்சை பெற முடியும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதுவரை இமாச்சல், ஹரியாணா, காஷ்மீர், உத்தராகண்ட் உள்ளிட்ட 8 மாநில அரசுகளும் சண்டிகர் உள்ளிட்ட 4 யூனியன் பிரதேச அரசுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.

குஜராத், ம.பி., உ.பி., பிஹார், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என அந்த அதிகாரி தெரிவித்தார். எனினும், டெல்லி, ஒடிசா, பஞ்சாப் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி இதுவரை எந்த சாதகமான பதிலையும் தெரிவிக்கவில்லை. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x