அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டில் 1,340 இந்தியர்கள் தற்கொலை

அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டில் 1,340 இந்தியர்கள் தற்கொலை
Updated on
1 min read

துபாய்: அரபு நாடு​களில் கடந்த 3 ஆண்​டு​களில் 1,340 இந்தியர்கள் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ள​னர். இதுதொடர்​பாக உறுப்பினர் ஒரு​வரின் கேள்விக்கு மக்​களவை​யில் மத்​திய வெளி​யுறவுத்​துறை இணை அமைச்​சர் கீர்த்தி வரதன் சிங் அளித்த பதில்: பல்​வேறு உலக நாடு​களில் இந்​தி​யர்​கள் பணி​யாற்றி வருகின்​றனர்.

இந்​நிலை​யில் கடந்த 3 ஆண்​டு​களில் வெளி​நாடு​களில் வேலை செய்து வந்த 1,900 இந்​தி​யர்​கள் தற்​கொலை செய்​து​கொண்டுள்ளனர். இதில் அரபு நாடு​கள் முதலிடத்​தில் உள்​ளன. அங்கு மட்​டும் 1,340 இந்​தி​யர்​கள் தற்​கொலை செய்​து​கொண்டு இறந்​துள்​ளனர். இதில் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் (யுஏஇ) 511 பேரும், சவுதி அரேபி​யா​வில் 354 பேரும், குவைத்​தில் 162 பேரும், ஓமனில் 146 பேரும், பஹ்ரைனில் 101 பேரும், கத்​தா​ரில் 66 பேரும் தற்​கொலை செய்​து​கொண்டு இறந்​துள்​ளனர்.

அதற்கு அடுத்​த​படி​யாக மலேசிய நாட்​டில் 131 இந்தியர்களும், அமெரிக்​கா​வில் 62 பேரும், இத்​தாலி, கனடா, பிரிட்​டனில் தலா 30 க்​கும் மேற்​பட்​டோரும் இந்த கால​கட்​டத்​தில் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளனர். அரபு நாடு​களில் மட்​டும் இந்​திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு கோடிக்​கும் அதி​க​மான இந்தியர்கள் வசித்து வரு​கின்றனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

அரபு நாடுகளில் கடந்த 3 ஆண்டில் 1,340 இந்தியர்கள் தற்கொலை
“ஒரு பிரதானை நீக்கிவிட்டு பிரதமரை காப்பாற்றிவிட்டீர்கள்” - மக்களவையில் அகிலேஷ் யாதவ் சாடல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in