

பிஜ்னோர்: உ.பி.யின் பிஜ்னோர் மாவட்டம், தாம்பூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த புதுமணத் தம்பதி உள்ளிட்ட 6 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒரு டெம்போ வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தாம்பூர் அருகில் இவர்களின் வாகனம் நேற்று அதிகாலையில் வந்துகொண்டிருந்தபோது, அதனை முந்திச் செல்ல ஒரு கார் முயன்றது. அப்போது அந்த கார், டெம்போ வாகனத்தின் பின்பக்கம் மோதியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். டெம்போ டிரைவர் அஜாப் சிங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த இருவர் காயம் அடைந்தனர்.