கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை

கர்நாடகாவில் அரசு அலுவலகங்களில் புகையிலைக்கு தடை
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக அரசின் பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த இயக்குநரகம் வெளியிட்டுள்ள‌ சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கர்நாடக அரசு ஊழியர்கள் உடல் நலம், பொதுமக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசு அலுவலகங்கள், அலுவலக வளாகங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருட்களை உபயோகித்தல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல அலுவலகங்களில் போதை தரக்கூடிய எந்தப் பொருளையும் உட்கொள்வதும் தடை செய்யப்படுகிறது.

இதுதொடர்பான எச்சரிக்கைஅறிவிப்பு பலகை, அலுவலகங்களில் பொருத்தமான இடங்களில் வைக்கப்பட வேண்டும். இதை மீறினால் ஊழியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in