ஊழலை ஒழிக்க சரியான சட்ட நடவடிக்கை அவசியம்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்

ஊழலை ஒழிக்க சரியான சட்ட நடவடிக்கை அவசியம்: குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

“ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது சரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால், ஊழல்வாதிகள் ஊக்கம்பெற்றுவிடுவர்” என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஊழல்வாதிகளைக் கட்டுப்படுத்துவதில் சட்ட நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், “சமூக வாழ்க்கைக்கு நம்பிக்கை என்பது அடித்தளமாக உள்ளது. சமூக ஒற்றுமைக்கும் அதுதான் அடிப்படை. அரசின் செயல்பாடுகளை மக்கள் நம்பும்போதுதான் அரசு அமைப்புக்கு அர்த்தம் கிடைக்கிறது. ஊழல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டும் இல்லை, சமூக நம்பிக்கைக்கும் தடையாக உள்ளது. மக்களின் நம்பிக்கையை அது குலைக்கிறது. தாமதமான நடவடிக்கை, ஊழல்வாதிகளை ஊக்குவிக்கிறது. எனவே ஊழலுக்கு எதிரான சரியான நடவடிக்கை மிக முக்கியமானது. அதேசமயம், உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கக் கூடாது.

கடந்த 10 ஆண்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசின் கொள்கைகள் ஊழலை வேறோடு ஒழிக்கும் என்பதை உறுதியாக நம்புக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in