

வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை 67 முறை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசம், பரேலியின் கில்லா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவர் வன்ஷ் அகர்வால். நகை வியாபாரியின் மகனான அவர், கணக்குப் பாடத்தில் அளிக்கப்பட்ட வீட்டுப் பாடத்தை செய்யாமல் வகுப்புக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை அமித் சிங் ரோஹில்லா, மாணவனின் கன்னங்களில் மாறி, மாறி தொடர்ந்து அறைந்திருக்கிறார்.
ஆசிரியைக்கு பயந்து அமித் தனது பெற்றோரிடம் எதுவும் சொல்லவில்லை. இச்சம்பவம் இருவாரங்கள் கழித்து அமித்தின் பெற்றோருக்கு தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அமித்தின் தந்தை தீபக் அகர்வால், பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தார். பள்ளி நிர்வாக விசாரணையில் ஆசிரியர் ரோஹில்லா மாணவனை அறைந்த சம்பவம் உறுதிப்படுத் தப்பட்டது. இதன்பேரில் ரோஹில்லாவை பணிநீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.