குஜராத்தி புத்தாண்டு: பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து

குஜராத்தி புத்தாண்டு: பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத்தில் நேற்று குஜராத்தி புத்தாண்டு உறசாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குஜராத் மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டும், உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்கு சென்றும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

புத்தாண்டு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “இன்று தொடங்கும் இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், வெற்றியையும், செழிப்பையும் தருவதுடன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கட்டும். வரும் ஆண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும். மேலும் ஒவ்வொரு நாளும் புதிய ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணங்களால் நிரம்பட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், “சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவருக்கும் குஜராத்தி புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புத்தாண்டு உங்களுக்கு நிறைய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரட்டும்" என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் முறையே அகமதாபாத் மற்றும் காந்தி நகரில் உள்ள தங்கள் வீடுகளில் ஆதரவாளர்களை சந்தித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in