ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், ஷாங்குஸ்-லார்னூ பகுதியில் உள்ள ஹல்கன் காலி அருகே தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் - தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனவும் மற்றொருவர் உள்ளூர் நபர் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் எந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் நேற்று மற்றொரு மோதல் சம்பவம் நடைபெற்றது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in