இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
Updated on
1 min read

புதுடெல்லி: இருதரப்பு உறவை வலுப்படுத்த கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியும், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்-ம் தங்கள் நாடுகளுக்கு இடையேயான கூட்டாண்மையை மேம்படுத்தும் நோக்கில் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் உடன் ஆக்கிப்பூர்வமான தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா - கிரீஸ் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான எங்கள் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

வர்த்தகம், பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்து மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராக கிரீஸ் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரீஸ் பிரதமர் மிட்சோடாகிஸின் இந்தியா வந்திருந்தார். அப்போது திட்டமிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் இந்த தொலைபேசி உரையாடல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

இந்த உரையாடலின்போது, மத்திய தரைக் கடல் பொருளாதார ஒத்துழைப்பு (IMEEC) மற்றும் மேற்கு ஆசியாவின் முன்னேற்றங்கள் உள்பட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in