

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ராஷ்ட்ரீய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு திங்கள்கிழமை காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர் மும்பையில் உள்ள ஏசியன் ஹார்ட் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, லாலுவின் உடல் நிலை குறித்து கவலை அடைய தேவையில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அவருக்கு இருதய அறுவை தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறுவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக லாலு பிரசாத் குடும்பத்தினர் தரப்பில் இன்று இரவு 7 மணிக்குள் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
நேற்று வெளியான பிஹாரின் 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வென்றுள்ளது. இந்த நிலையில் கட்சியிம் லாலு-நிதிஷ் கூட்டணி கைப்பற்றி உள்ளது.
பிஹார் இடைத் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கூட்டணி, 10 தொகுதிகளில் 6 தொகுதிகளை வென்றது. தற்போது மருத்துவமனைடில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவ், மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் நிருபம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர் சிதாராம் யெச்சூரி, பிஹார் ஆளுநர் பாட்டீல் ஆகியோர் சந்தித்து பேசினர்.
66- வயதான லாலு பிரசாத், இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் 20-ல் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.