ஆந்திராவில் லாரி, கார் மோதல் 6 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் லாரி, கார் மோதல் 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

அனந்தபூர்: ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தில் நேற்று பிற்பகல், வேகமாக வந்த காரின் முன் டயர் திடீரென பஞ்சரானது. இதில், எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனந்தபூரை சேர்ந்த சந்தோஷ், ஷண்முக், வெங்கண்ணா, ஸ்ரீதர், பிரசன்னா, வெங்கி ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் தாடிபத்ரியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய போது இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இது குறித்து சிங்கனமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in