Published : 10 Aug 2014 10:48 AM
Last Updated : 10 Aug 2014 10:48 AM

ஆசியான் அமைப்புடன் நட்புறவை வலுப்படுத்த 5 ஆண்டு திட்டம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சு

ஆசியான் அமைப்புடனான இந்தி யாவின் நட்புறவை வலுப்படுத்த 5 ஆண்டுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

இந்தியா ஆசியான் அமைப் பின் 12-வது மாநாடு மியான்மர் தலைநகர் நேபிடாவில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது: “ஆசியான் அமைப் புடன் இணைந்து செயல்பட இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அரசு ஆர்வமாக உள்ளது. இந்த அமைப் புடனான நட்புறவை முன்னெ டுத்துச் செல்வதன் மூலம் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக மக்க ளுடைய விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும்.

பிற நாடுகளுடனான தொடர்பை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களின் வெளியுறவுக் கொள்கை.

இந்த அமைப்பைச் சேர்ந்த நாடு களிடையே புவியியல், நிறுவனங் கள் ரீதியாக மட்டுமின்றி, மக்களுக்கு இடையேயும் தொடர்பை அதிகரிப்பதற்கான நடவடிக் கையை மேற்கொள்ள வேண்டும்.

ஆசியான் அமைப்புக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆண்டுக்கு 26 முறை பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறது.

இருதரப்பு நட்புறவை வலுப் படுத்தும் வகையிலும், ஆசியான் அமைப்புடன் இணைந்து 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் 5 ஆண்டு திட்டம் ஒன்றை தயாரித்து வருகிறோம்.

கிழக்கை நோக்கி என்ற எங்களின் லட்சியமும், மேற்கை நோக்கி என்ற உங்களின் (ஆசியான்) லட்சியமும் ஒரே புள்ளியில் இணைவதன் மூலம் நமக்கிடையேயான உறவு வலுவடைந்து வருகிறது. நமது பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத் தன்மை, பொருளாதார வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை எதிர்காலத் தில் கொண்டுவர வேண்டும் என்பதில் இருதரப்புக்கும் ஒரே விதமான சிந்தனை உள்ளது.

இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த, ‘ஆசியான் இந்தியாவின் சிறந்த வல்லுநர்கள் குழு’ பல்வேறு யோசனைகளை தெரிவித்துள்ளது.

ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பை மியான்மர் ஏற்றுக்கொண்டுள்ளதை வரவேற்கி றோம்” என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x