

மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின், ரேகா ஆகியோர், அவைக்கு சரியாக வராதது குறித்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் ரேகா கலந்துக்கொண்டார்.
கடந்த 2012- ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், ரேகா ஆகியோர் அவைக்கு சரியாக வருவதில்லை என சர்ச்சை கிளம்பியது.
இதனைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர், மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜெ.குரியனுக்கு விடுப்புக் கடிதம் அனுப்பி அதற்கான ஒப்புதலை பெற்றார்.
இந்த நிலையில், ரேகா இன்று நாடாளுமன்றம் வந்தார். மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் பங்கேற்ற அவர், அரை மணி நேரம் அவை நடவடிக்கைகளை பார்த்துவிட்டு, பின்னர் உணவு இடைவேளைக்கு சற்று முன்னதாக அவையிலிருந்து கிளம்பிச் சென்றார்.
நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சென்ற அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து, தொடர் கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்கவில்லை. இதனை அடுத்து அவரை அங்கிருந்த அவை பாதுகாவலர்கள் பாதுகாப்பாதாக அழைத்துச் சென்றனர்.