Published : 18 Oct 2024 05:07 AM
Last Updated : 18 Oct 2024 05:07 AM
புதுடெல்லி: ராமாயணம் இதிகாசத்தை இயற்றிய மகரிஷி வால்மீகியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்றார்.
அங்குள்ள வால்மீகி சிலையை வழிபட்டவர் பின்னர் அதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறைகளைப் பார்வையிட்டார். அதிலும் காந்தியடிகள் 200 நாட்களுக்கு மேல் தங்கிய ஓர் அறைஅந்த கோயிலில் உள்ளது. அங்குகாந்தியடிகளின் பலவிதமானபுகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை ராகுல் காந்தி நேற்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
இது குறித்து ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவு: இன்று காலை இந்த விசேஷ நாளில், டெல்லியில் உள்ள வால்மீகி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தேன். இதே கோயில் வளாகத்துக்குள் இருக்கக்கூடிய அறையில் வசித்தவர் மகாத்மா காந்தியடிகள். அப்போது வால்மீகிசமூகத்தை சேர்ந்த மக்களுடன் காந்தியடிகள் பல நாட்கள் கழித்தார். ‘பாபு நிவாஸ்’ என்றழைக்கப்படும் காந்தியடிகள் வசித்த அந்தஅறையில் நானும் இன்று சிறிதுநேரம் கழித்து உத்வேகம் பெற்றேன். உண்மை, நீதி மற்றும் அன்பும் கருணையும் நிறைந்த ஒற்றுமை பாதையை மனிதக்குலத்துக்கு எடுத்துக்காட்டிய மகரிஷி வால்மீகிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை உரித்தாக்குகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT