

விஜயவாடா: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்ற ழுத்த தாழ்வு மண்டலத்தால், ஆந்திராவில் திங்கட்கிழமை (நேற்று) முதல் வியாழக்கிழமை வரை பரவலாக பலத்த காற்றும் கன மழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தலைமையில், உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்படி, பலத்த மழை காரணமாக 16-ம் தேதி (நாளை) விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கனமழை காரணமாக ஆந்தி ராவில் பல மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை அறிவித்தனர்.