ராவணன் வதைக்கு இரங்கல் அனுசரிக்கும் உத்தரபிரதேச கிராமம்

ராவணன் வதைக்கு இரங்கல் அனுசரிக்கும் உத்தரபிரதேச கிராமம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேசம் பிஸ்ரக் கிராமத்தில் ராவணன் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்த கிராமத்தினர் நவராத்திரி கொண்டாடுவ தில்லை. ராவணனின் ஞானத் துக்கும், சிவ பக்திக்கும் அவர்போற்றப்பட்டிருக்க வேண்டியவர் என்று நம்புகின்றனர்.

ஆகையால் அவர் வதம் செய்யப்பட்ட நாளில் அவரது ஆன்மா சாந்தியடைய சமயசடங்குகளை கடைபிடிக்கின்றனர். ஆகவே தசரா அன்று தங்களது கிராமத்தில் உள்ள பிஸ்ரக் ராவணன் கோயிலில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேநேரம் இந்த ஊர் மக்கள் ராமரையும் பக்தியுடன் வணங்குகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in