மாதிரிப் படம்
மாதிரிப் படம்

பயிற்சியின்போது துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 அக்னி வீரர்கள் உயிரிழப்பு

Published on

நாசிக்: மகாராஷ்டிராவில் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாகத் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் இரண்டு அக்னி வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை பிற்பகல் நடந்ததாக கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி பயிற்சி மையத்தில் அக்னிவீரர்கள் வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் அக்னிவீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங்(20), சைபத் ஷிட்(21) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இதுகுறித்து ஹவில்தார் அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விபத்து மரணம் (accidental death) என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in