அதீத தன்னம்பிக்கை கூடாது: அர்விந்த் கேஜ்ரிவால் கருத்து

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்
Updated on
1 min read

புதுடெல்லி: ஹரியானாவின் 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 89 தொகுதிகளில் ஆம் ஆத்மி நேரடியாக களமிறங்கியது. இந்நிலையில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அக்கட்சி தோல்வியை தழுவி உள்ளது.

இதையடுத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், “தேர்தலில் யாரும் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்துவிடக் கூடாது என்ற பாடத்தை ஹரியானா தேர்தல் முடிவு கற்றுத் தந்துள்ளது. எந்தத் தேர்தலையும் சாதாரணமானதாக எடுத்துவிடக் கூடாது. ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு இடமும் கடினமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வந்தன. நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இதையடுத்து அக்கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் பின்தங்கியது. பாஜக முன்னிலை வகிக்கத் தொடங்கியது. ஹரியானாவில் காங்கிரஸ் 36 இடங்களில் வென்றுள்ள நிலையில், பாஜக 49 இடங்களைக் கைப்பற்றி தொடர்ந்து 3-வது முறையாக அங்கு ஆட்சி அமைக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை குறிப்பிடும் விதமாகவே, தேர்தலில் அதீத தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடாது என்று கேஜ்ரிவால் கூறி இருப்பதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in