Published : 09 Oct 2024 08:01 AM
Last Updated : 09 Oct 2024 08:01 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைவது உறுதியாகிவிட்டது. இருப்பினும், இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி மற்றும் இன்ஜினியர் ரஷித்தின் அவாமி இத்திகாட் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளன.
கடந்த மக்களவை தேர்தலின்போது ரஷித் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவையே தோற்கடித்தது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
மக்களவை தேர்தலில் கிடைத்த எதிர்பாராத வெற்றி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஷித்தின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. அவரது சகோதரர் மட்டும் முன்னிலையில் இருந்தார். அதேபோன்று, குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2022-ம் ஆண்டு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை ஆரம்பித்தார். பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT