Published : 09 Oct 2024 08:28 AM
Last Updated : 09 Oct 2024 08:28 AM
புதுடெல்லி: “ஹரியானாவில் காங்கிரஸ் உறுதியாக வெல்லும். காங்கிரஸால் கூட இனி காங்கிரஸை தோற்கடிக்க முடியாது” என்று தேர்தல் பரப்புரையின்போது அக்கட்சியினர் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
“பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவற்றதாக காங்கிரஸ் இருப்பதையே ஹரியானாவில் அக்கட்சியின் தோல்வி காட்டுகிறது. பாஜகவுடன் நேரடியாக மோதும் இடங்களில் காங்கிரஸால் தன்னை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. மற்ற இடங்களில் அது பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியுடனே பாஜகவை எதிர்கொள்கிறது.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால், அம்மூன்றிலும் அக்கட்சி தோல்வியையே தழுவியது. அந்த வகையில் வட மாநிலங்களில் பாஜகவை தனித்து எதிர்கொள்வது காங்கிரஸுக்கு இன்னும் சவாலாகவே உள்ளது” என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT