Published : 09 Oct 2024 08:38 AM
Last Updated : 09 Oct 2024 08:38 AM

8 பேர் போட்டியிட்ட நிலையி்ல் ஹரியானாவில் தேவிலால் குடும்பத்தில் இருவர் வெற்றி

ஆதித்ய தேவிலால் (படத்தில் வலது பக்கம் உள்ளவர்)

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் போட்டியிட்ட நிலையி்ல் இருவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியானா தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதுள்ளது.

ஐஎன்எல்டி சார்பில் தேவிலாலின் பேரன் ஆதித்ய தேவிலால், தப்வாலி தொகுதியிலும் தேவிலாலின் கொள்ளு பேரன் அர்ஜுன் சவுதாலா (32) ரைனா தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஹரியானா முதல்வர்களாக தேவிலாலும் அவரது மகன் ஓம்பிரகாஷ் சவுதாலாவும் பதவி வகித்துள்ள நிலையில், கடந்த 2018-ல் ஓம் பிரகாஷ் சவுதாலா குடும்பம்இரண்டாகப் பிரிந்தது.

தேவிலாலின் கொள்ளுபேரன்துஷ்யந்த் சவுதாலா தலைமையில்ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி)உருவானது. கடந்த 2019 தேர்தலில் இக்கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்று. கிங் மேக்கராக துஷ்யந்த் உருவானார்.

துஷ்யந்தின் ஜேஜேபி.யும்சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத்சமாஜ் கட்சியும் தற்போது கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இக்கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.

இதில் ஜேஜேபி சார்பில் போட்டியிட்ட துஷ்யந்த் சவுதாலா, அவரது தாய் நைனாசிங் சவுதாலாசகோதரர் திக்விஜய் சிங் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

இதுபோல் ஐஎன்எல்டி சார்பில் போட்டியிட்ட தேவிலால் குடும்பத்தை சேர்ந்த சுனைனா சவுதாலா, அபய் சவுதாலா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் தம்பியும் முன்னாள் எரிசக்தி துறை அமைச்சருமான ரஞ்சித் சவுதாலா, பாஜக டிக்கெட் மறுத்ததால் சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால் அவரும் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x