Published : 08 Oct 2024 07:33 AM
Last Updated : 08 Oct 2024 07:33 AM

துர்கை அம்மனை கவுரவிக்க பாடல் எழுதினார் பிரதமர் நரேந்திர மோடி: சமூக வலைதளங்களில் வைரல்

புதுடெல்லி: நமது நாட்டில் கொண்டாடப்படும் நவராத்திரி விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா முடிந்ததும் 10-ம் நாள் விஜய தசமி விழா நடைபெறும். இந்த பண்டிகை தொடங்கியுள்ளதை அடுத்து பக்தர்கள் விரதம் இருந்து பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இப்பண்டிகை வட மாநிலங்களில் தசரா பண்டிகை என்ற பெயரில் கொண்டாடப்படு கிறது. குறிப்பாக மேற்கு வங்கம், கர்நாடகாவில் தசரா விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நவராத்திரியை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘கர்பா' பாடலை எழுதி உள்ளார். கர்பா என்பது பாரம்பரியமான குஜராத் வகை நடனமாக அறியப்படுகிறது. முக்கியமாக நவராத்திரி காலத்தில் இந்த நடனம் பல இடங்களில் நடத்தப்படும்

ஆவதி கலாய்: இதுகுறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளி யிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இது நவராத்திரியின் புனித மான நாள். அன்னை துர்கை மீதான பக்தியால் ஒன்றுபட்டு பக்தர்கள் பல்வேறு வகைகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்னையின் சக்தி மற்றும் கருணைக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆவதி கலாய்' என்ற தலைப்பில் கர்பா பாடல் ஒன்றை எழுதி உள்ளேன். நமக்கு அன்னை துர்கையின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கட்டும்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் நவராத்திரி பண்டிகை வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நல்ல நாளில் அனைவரது வாழ்க்கையிலும் வளம் வந்து சேரட்டும். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாடகருக்கு பாராட்டு: மற்றொரு எக்ஸ் பதிவில், இந்த பாடலை பாடிய பாடகர் பூர்வ மந்திரிக்கு, பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி யுள்ளது. ஏராளமானோர் இந்தப் பாடலை சமூக வலைதளங்களில் தங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்தும் வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x